முதல்ல, என் பேரப் பத்தி சொல்லிடுறேன்...
ஒரு சின்னப் பூக்கொடிக்கு தேரையே கொடுத்த ஒரு ராஜாவோட பேரத் தான் அப்பாவும் அம்மாவும் எனக்கு வச்சுருக்காங்க.
அவர் பேரு தான் பாரி. பறம்பு நாடுன்னு ஒரு சூப்பரான ஊரை அவர் ஆட்சி செஞ்சாராம். யாரு எது கேட்டாலும் 'இல்ல'னு சொல்லவே மாட்டாராம்.
ஒரு நாள் காட்டுக்குள்ள தேரை நிறுத்திட்டு எங்கேயோ ரவுண்ட்ஸ் போயிருக்காரு. திரும்பி வந்து பாத்தா, ஒரு முல்லைக் கொடி படர்றதுக்கு இடமில்லாம அந்தத் தேர் மேல ஏறி உக்காந்துருச்சாம். உடனே அவரு அந்தத் தேரை அப்படியே அந்த கொடிக்கே விட்டுட்டு நடந்து வந்துட்டாராம். அம்மா இதை 'வள்ளல் தன்மை'னு சொல்றாங்க. ஆனா என்னைக் கேட்டா, 'தேரை எங்கேயோ தொலைச்சிட்டு வந்துட்டாரு'னு தான் சொல்லுவேன்.
இப்போ நான் அந்தப் பேருக்கு ஏத்த மாதிரி நடந்துக்கணுமாம். இதுவரைக்கும் நான் ஒரு பாதி வாழைப்பழத்தை மட்டும்தான் ஷேர் பண்ணிருக்கேன், சொல்லப்போனா... கொடுத்த அடுத்த செகண்டே அதை நினைச்சு ரொம்ப ஃபீல் பண்ணேன்!